Friday 9 December 2011

ஒளவையாரால் பாட பெற்ற திருகுடந்தை நம்ம கும்பகோணம் ....

ஔவையார் ஒரு முறை நம்ம கும்பகோணம் வந்து இருக்கின்றார் என்ற செய்தியினை பெருமையுடன் சொல்லி கொள்ளுகிறேன் . பழைய திருக்குடந்தையில் ஔவையார் வந்திருந்தபொழுது ... ஊருக்கெல்லாம் இல்லை என சொல்லாது ... வாரி வழங்கிய   மருதன் எனும் வள்ளலையும் கண்டுள்ளார். அதே நேரத்தில் யாருக்கும் உதவி செய்யது வாழ்ந்து வந்த ஒரு கஞ்சனையும் கண்டார்... இருவர் வீடு முன் உள்ள வாழைமரத்தையும் பார்த்து .... செம்மொழி தமிழில் இப்படி பாடுகின்றார்...

                                திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்க்கும்
                                மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தும்
                                இலையுமில்லை பூவுமில்லை காயுமில்லை
                                என்றும்  உலகில் வருவிருந்தோர் டுண்டு.


அதன் பொருள் : ' செல்வம் குறையல்லாத கஞ்சனின் வீடு வாசலில் கட்டப்பட்ட வாழைமரம் வாழைகுலையோடு நிற்கிறது , ஆனால் திருகுடந்தை மருதன் வீட்டு வாசலில் கட்டப்பட்ட வாழைமரம், வாழை பழமும் இல்லாது, இலை இல்லாது, பூ இல்லாது நிற்கிறது ..... விருந்தினரோடு அவன் உண்ட தன்மையினால் அது அப்படி விளங்குகிறது , என திருகுடந்தை மருதன் புகழ் சொல்கிறார் .


No comments:

Post a Comment